௨
திரும்பிச் சென்ற கைதிகளின் பட்டியல்
௧ அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்த அப்பகுதி ஜனங்கள் இவர்கள். முன்பு, பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சார் இவர்களைப் பாபிலோனுக்குக் கைதிகளாகக் கொண்டுபோயிருந்தான். இவர்கள் இப்போது எருசலேம் மற்றும் யூதாவிற்குத் திரும்பி வந்தார்கள். ஒவ்வொருவரும் தமது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார்கள். ௨ செருபாபேலோடு திரும்பிய ஜனங்களின் விபரம்: யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா. இஸ்ரவேலில் இருந்துதிரும்பிய ஜனங்களின் பெயர்களும் எண்ணிக்கையும் கீழ்வருமாறு:
௩ பாரோஷின் சந்ததியினர்#2,172
௪ செபத்தியாவின் சந்ததியினர்#372
௫ ஆராகின் சந்ததியினர்#775
௬ யெசுவா மற்றும் யோவாபின்
குடும்பத்திலிருந்து பாகாத்
மோவாபின் சந்ததியினர்#2,812
௭ ஏலாமின் சந்ததியினர்#1,254
௮ சத்தூவின் சந்ததியினர்#945
௯ சக்காயின் சந்ததியினர்#760
௧௦ பானியின் சந்ததியினர்#642
௧௧ பெபாயின் சந்ததியினர்#623
௧௨ அஸ்காதின் சந்ததியினர்#1,222
௧௩ அதொனிகாமின் சந்ததியினர்#666
௧௪ பிக்வாயின் சந்ததியினர்#2,056
௧௫ ஆதீனின் சந்ததியினர்#454
௧௬ எசேக்கியாவின் குடும்பம்
வரைக்கும் அதேரின் சந்ததியினர்#98
௧௭ பேசாயின் சந்ததியினர்#323
௧௮ யோராகின் சந்ததியினர்#112
௧௯ ஆசூமின் சந்ததியினர்#223
௨௦ கிபாரின் சந்ததியினர்#95
௨௧ பெத்லகேமின் ஊரிலிருந்து#123
௨௨ நெத்தோபாவின் ஊரிலிருந்து#56
௨௩ ஆனதோத்தின் ஊரிலிருந்து#128
௨௪ அஸ்மாவேத்தின் ஊரிலிருந்து#42
௨௫ கீரியாத்யாரீம், கெபிரா,
பேரோத் ஆகியோர் ஊரிலிருந்து#743
௨௬ ராமா, காபா ஆகியோரின்
ஊரிலிருந்து#621
௨௭ மிக்மாசின் ஊரிலிருந்து#122
௨௮ பெத்தேல், ஆயி ஊரிலிருந்து#223
௨௯ நேபோவின் ஊரிலிருந்து#52
௩௦ மக்பீஷின் ஊரிலிருந்து#156
௩௧ ஏலாமின் ஊரிலிருந்து#1,254
௩௨ ஆரீமின் ஊரிலிருந்து#320
௩௩ லோத், ஆதீத், ஓனோ
ஊரிலிருந்து#725
௩௪ எரிகோவின் ஊரிலிருந்து#345
௩௫ சேனாகின் ஊரிலிருந்து#3,630
௩௬ பின்வரும் பட்டியல் ஆசாரியர்களுடையவை: யெசுவாவின் குடும்பம் வழியாய் யெதாயாவின்
சந்ததியினர்#973
௩௭ இம்மேரின் சந்ததியினர்#1,052
௩௮ பஸ்கூரின் சந்ததியினர்#1,247
௩௯ ஆரீமின் சந்ததியினர்#1,017
௪௦ கீழே குறிப்பிடப்பட்டிருப்பவர்கள் லேவியின் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள்:
ஒதாயாவின் குடும்பம் முடிய
யெசுவா மற்றும் கத்மியேல் சந்ததியினர்#74
௪௧ பாடகர்கள்:
ஆசாபின் சந்ததியினர்#128
௪௨ கீழ்வருபவர்கள் ஆலய வாசல் காவலாளர்களின் சந்ததியினர்:
சல்லூம், அதேர், தல்மோன்,
அக்கூப், அதிதா, சோபா சந்ததியினர்#139
௪௩ ஆலயச் சிறப்பு பணியாளர்களின் சந்ததியினர்:
சீகா, அசுபா, தபாகோத்,
௪௪ கேரோஸ், சீயாகா, பாதோன்,
௪௫ லெபானாக், அகாபா, அக்கூப்,
௪௬ ஆகாப், சல்மாய், ஆனான்,
௪௭ கித்தேல், காகார், ராயாக்,
௪௮ ரேத்சீன், நெகோதா, காசாம்,
௪௯ ஊசா, பாசெயா, பேசாய்,
௫௦ அஸ்னா, மெயூனீம், நெபுசீம்,
௫௧ பக்பூக், அகுபா, அர்கூர்,
௫௨ பஸ்லூத், மெகிதா, அர்ஷா,
௫௩ பர்கோஸ், சிசெரா, தாமா,
௫௪ நெத்சியா, அதிபா.
௫௫ சாலொமோனின் வேலைக்காரர்களது சந்ததியினர்:
சோதாய், சொபெரேத், பெருதா,
௫௬ யாலாக், தர்கோன், கித்தேல்,
௫௭ செபத்தியா, அத்தீல், செபாயீமிலுள்ள பொகெரேத் எசாபயிம், ஆமி.
௫௮ ஆலயப் பணியாட்களும்
சாலொமோனின் வேலைக்காரர்களும்
மொத்தம்#392
௫௯ எருசலேமிற்குச் சில ஜனங்கள் தெல்மெலாக், தெல்அர்சாவி, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய இடங்களில் இருந்து வந்தனர். ஆனால் இந்த ஜனங்களால் தங்களுடைய குடும்பங்கள் இஸ்ரவேல் குடும்பத்திலிருந்து வந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
௬௦ தெலாயா, தொபியா, நெகோதா சந்ததியினர்#652
௬௧ ஆசாரியர்களின் குடும்பங்களில் இருந்து வரும் சந்ததியினரின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
அபாயா, கோஸ், பர்சிலாய் (ஒருவன் பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான்.
அவனும் பர்சிலாயின் சந்ததியினரோடு சேர்த்து எண்ணப்பட்டான்.)
௬௨ இந்த ஜனங்கள் தங்கள் குடும்ப வரலாற்றைத் தேடினார்கள், ஆனால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தங்கள் முற்பிதாக்கள் ஆசாரியர்கள், என்பதை நிரூபிக்க முடியவில்லை. எனவே, ஆசாரியர்களாகச் சேவைசெய்ய முடியவில்லை. ஆசாரியர்களின் ஜனங்கள் பட்டியலில், இவர்கள் இடம்பெற முடியவில்லை. ௬௩ இவர்கள் பரிசுத்தமான உணவுப் பொருட்கள் எதையும் உண்ணக்கூடாது என்று ஆளுநர் கட்டளையிட்டார். ஓர் ஆசாரியன் ஊரீமையும் தும்மீமையும் பயன்படுத்தி, தேவனிடம் என்ன செய்யவேண்டும் என்பதைக் கேட்கும் வரைக்கும் அவர்களால் அந்த உணவு எதையும் உண்ண முடியவில்லை.
௬௪-௬௫ ஆக மொத்தம், 42,360 பேர் திரும்பி வந்த குழுவில் இருந்தார்கள். அவர்களின் வேலைக்காரர்களான 7,337 ஆண்கள் மற்றும் பெண்களையும் சேர்க்கவில்லை. அவர்களோடு 200 பாடகர்கள், ஆண்களும் பெண்களுமாய் இருந்தனர். ௬௬-௬௭ அவர்களிடம் 736 குதிரைகள், 245 கோவேறு கழுதைகள், 435 ஒட்டகங்கள், 6,720 கழுதைகள் இருந்தன.
௬௮ இக்கூட்டம் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய்ச் சேர்ந்தது. பிறகு குடும்பத் தலைவர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்காக அன்பளிப்புகளைக் கொடுத்தனர். ஆலயம் அழிக்கப்பட்ட இடத்திலேயே புதிய ஆலயத்தைக் கட்ட எண்ணினார்கள். ௬௯ ஜனங்கள் தங்களால் முடிந்தவரை கொடுத்தனர். அவர்கள் ஆலயத்தைக் கட்டுவதற்காகக் கொடுத்த பொருட்கள் வருமாறு: 61,000 தங்கக் காசுகள், 5,000 இராத்தல் வெள்ளி, 100 ஆசாரியர்களுக்கான ஆடைகள்.
௭௦ எனவே ஆசாரியர்களும், வேலையாட்களும், மற்றும் பலரும் எருசலேமிலும் அதைச் சுற்றிய இடங்களுக்கும் போனார்கள். இவர்களோடு ஆலயப் பாடகர்களும், வாயில் காவலர்களும், ஆலயப் பணியாளர்களும் இருந்தனர். இஸ்ரவேலின் மற்ற ஜனங்கள் தங்கள் சொந்த நகரங்களில் தங்கினார்கள்.