௨௪
ஆசாரியர்களின் குழுக்கள்
௧ ஆரோன் மகன்களின் கீழ்க்கண்ட குழுக்கள்: நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர் ஆரோனின் மகன்கள். ௨ ஆனால் நாதாபும், அபியூவும் தந்தைக்கு முன்னரே செத்துவிட்டனர். அவர்களுக்கு மகன்களும் இல்லை. எனவே எலெயாசாரும் இத்தாமரும் ஆசாரியர்களாக தொண்டாற்றினார்கள். ௩ எலெயாசர், இத்தாமார் ஆகிய இரண்டு கோத்திரங்களையும் வேறு வேறு குழுக்களாக தாவீது பிரித்து வைத்தான். தமக்கு ஒப்படைக்கப்பட்ட வேலைகளைச் சரிவரச் செய்யும் பொருட்டு தாவீது இக்குழுக்களை இவ்விதம் பிரித்தான். தாவீது இதனை சாதோக், அகிமெலேக் ஆகியோரின் உதவியைக் கொண்டு இவ்வாறு செய்தான். சாதோக் எலெயாசாரின் சந்ததியைச் சேர்ந்தவன். அகிமெலேக்கு இத்தாமாரின் சந்ததியைச் சேர்ந்தவன். ௪ இத்தாமாரின் குடும்பத்தைவிட எலெயாசாரின் குடும்பத்தில் ஏராளமான தலைவர்கள் இருந்தனர். எலெயாசாரின் குடும்பத்தில் 16 தலைவர்களும் இத்தாமாரின் குடும்பத்தில் இருந்து 8 தலைவர்களும் இருந்தனர். ௫ ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஆண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிலர் பரிசுத்த இடத்தின் பொறுப்புக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மற்றவர்கள் ஆசாரியர்களாக சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் எலெயாசார், இத்தாமார் ஆகிய வம்சங்களில் இருந்து வந்தனர்.
௬ செமாயா செயலாளனாக இருந்தான். இவன் நெதனெயேலின் மகன். செமாயா, லேவியர் கோத்திரத்திலிருந்து வந்தவன். இவன் அவர்களின் சந்ததியினரின் பெயர்களை எழுதினான். அவன் இதனைத் தாவீது அரசன் மற்றும் சாதோக் ஆசாரியர்களின் தலைவர்கள், அகிமெலேக், ஆசாரிய குடும்பங்களின் தலைவர்கள், லேவியர்களின் தலைவர்கள் ஆகியோரின் முன்னிலையில் செய்தான். அகிமெலேக் அபியதாரின் மகன். அவர்கள் ஒவ்வொரு முறையும் சீட்டுக் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுத்தனர். செமாயா இவர்களின் பெயர்களை எழுதினான். எனவே, எலெயாசார் மற்றும் இத்தாமார் கோத்திரங்களிடையே வேலைகளைப் பங்கிட்டனர்.
௭ யோயாரீபின் குழு முதல் குழு.
யெதாயாவின் குழு இரண்டாவது குழு.
௮ ஆரிமின் குழு மூன்றாம் குழு.
செயோரீமின் குழு நான்காவது குழு
௯ மல்கியாவின் குழு ஐந்தாம் குழு.
மியாமீனின் குழு ஆறாம் குழு.
௧௦ அக்கோத்சின் குழு ஏழாம் குழு.
அபியாவின் குழு எட்டாவது குழு.
௧௧ யெசுவாவின் குழு ஒன்பதாவது குழு.
செக்கனியாவின் குழு பத்தாவது குழு.
௧௨ எலியாசீபின் குழு பதினோராவது குழு.
யாக்கீமின் குழு பன்னிரண்டாவது குழு.
௧௩ உப்பாவின் குழு பதின்மூன்றாவது குழு.
எசெபெயாவின் குழு பதினான்காவது குழு.
௧௪ பில்காவின் குழு பதினைந்தாவது குழு.
இம்மேரின் குழு பதினாறாவது குழு.
௧௫ ஏசீரின் குழு பதினேழாவது குழு.
அப்சேசின் குழு பதினெட்டாவது குழு.
௧௬ பெத்தகியாவின் குழு பத்தொன்பதாவது குழு.
எகெசெக்கியேலின் குழு இருபதாவது குழு.
௧௭ யாகின் குழு இருபத்தொன்றாவது குழு.
காமுவேலின் குழு இருபத்திரண்டாவது குழு.
௧௮ தெலாயாவின் குழு இருபத்தி மூன்றாவது குழு.
மாசியாவின் குழு இருபத்தி நான்காவது குழு.
௧௯ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஆரோனுக்கு கட்டளைகளைக் கற்பித்தார். இவர்கள் ஆலயத்தில் சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் ஆரோனின் விதிகளை ஆலயத்தில் சேவை செய்யக் கடைபிடித்தனர்.
மற்ற லேவியர்கள்
௨௦ மற்ற லேவியின் சந்ததியாரின் பெயர்கள் இவை:
அம்ராமின் சந்ததியினர்: சூபவேல், சூபவேலின் சந்ததியினர்: எகேதியா;
௨௧ ரெகபியாவின் வழிவந்த இஷியா, (இஷியா மூத்த மகன்.)
௨௨ இத்சாரியின் கோத்திரத்தில் இருந்து செலெ மோத், செசெமோத்தின் குடும்பத்தில் இருந்து யாகாத்.
௨௩ எப்ரோனின் மூத்த மகன் எரியா, இரண்டாம் மகன் அம்ரியா மூன்றாம் மகன் யாகாசியேல், நான்காம் மகன் எக்காமியாம்,
௨௪ ஊசியேலின் மகன் மீகா, மீகாவின் மகன் சாமீர்.
௨௫ மீகாவின் சகோதரன் இஷியா, இஷியாவின் மகன் சகரியா.
௨௬ மெராரியின் சந்ததியினர் மகேலி, மூசி ஆகியோர், யாசியாவின் மகன் பேனோ,
௨௭ மெராரியின் மகன் யாசியேல், யாசியேலுக்கு பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி ஆகியோர்.
௨௮ மகேலியின் மகனான எலெயாசார், எலெயாசாருக்கு மகன்கள் இல்லை.
௨௯ கீசின் மகனான யெராமியேல்.
௩௦ மூசியின் மகன்களாக மகேலி, ஏதேர், எரிமோத் ஆகியோர்.
இவை அனைத்தும் லேவியர் குடும்பங்களின் தலைவர்கள் பெயர்கள் ஆகும். அவர்களின் குடும்ப வரிசைப்படி இப்பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ௩௧ இவர்கள் சிறப்பு வேலைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் ஆசாரியர்களான தங்கள் உறவினர்களைப்போன்று, சீட்டுக் குலுக்கல் போட்டனர். ஆரோனின் சந்ததியினர் ஆசாரியரானார்கள். அரசனான தாவீது, சாதோக், அகிமெலேக், ஆசாரியர்களின் தலைவர்கள் மற்றும் லேவியர் குடும்பத்தினர் முன்னால் இவர்கள் சீட்டுக் குலுக்கல் போட்டனர். வேலைகளைத் தேர்ந்தெடுப் பதில் மூத்த வம்சத்தினரும் இளைய வம்சத்தினரும் ஒன்று போலவே நடத்தப்பட்டனர்.